[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

என்.ஐ.ஏ. கைது செய்த 16 பேர் ! 8 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

nia-16-arrested-allow-8-days-detention

தீவிரவாத அமைப்பிற்கு நிதி மற்றும் ஆட்கள் சேர்த்ததாக என்.ஐ.ஏ போலீஸால் கைது செய்யப்பட்ட 16 பேருக்கும் 8 நாள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க பூவிருந்தவல்லியில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரவாத செயலில் ஈடுபட அன்சாருல்லா என்ற அமைப்பிற்கு ஆட்கள் மற்றும் நிதி திரட்டியதாக கடந்த வாரம் நாகையில் அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகிய இரண்டு பேரை என்.ஐ.ஏ போலீசார் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக டெல்லியில் பதுங்கியிருந்த 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கைது செய்யப்பட்ட 16 பேரிடமும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. போலீசார் இன்று மனு  அளித்தனர். இதனை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டியன் 8 நாள் போலிஸ் காவலில் விசாரணை செய்து வரும் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த  உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close