[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம் அறிவிப்பு

rain-will-fall-next-to-days-in-tamil-nadu-chennai-met

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஒருசில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் மற்ற நேரங்களில் கடும் வெயில் காரணமாக வெப்பம் தாக்கி வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையால் மழை பெய்கிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறினார். மேலும், குமரிக்கடல், மாலத்தீவு, மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் 40-50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close