[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

'அரசுப் பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் இல்லை' - புதிய சர்ச்சை

there-is-no-tamil-in-government-school-biometrics

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஆங்கிலத்துடன், இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகைக்கான பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கருவியின் பழைய பதிப்பில் ஆங்கில மொழி மட்டுமே இருந்தது. 

இந்தநிலையில், சில நாட்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக்கின் பதிப்பு மாற்றப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பயோமெட்ரிக் கருவிகளில் ஆங்கிலத்துடன், இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அஞ்சலகத் தேர்வில் தமிழ் சேர்க்கப்படாததால், எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் இந்தி சேர்க்கப்பட்டிருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close