[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

"ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து பேசுங்கள்” - வைகோவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

chennai-high-court-stopped-vaiko-s-punishment

தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோவிற்கு எதிராக தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு கடந்த ஜூலை 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதன்படி வைகோவிற்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டது. பின்னர் அந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சிந்தித்து பேச வேண்டும் என வைகோவிற்கு அறிவுறுத்தினர். அத்துடன் மேல்முறையீடு மனு தொடர்பாக ஆயிரம்விளக்கு பகுதி காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை விசாரணை முடியும் வரை நிறுத்தி வைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close