[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

nalini-s-petition-dismissed-by-chennai-high-court

7 பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக் கோரி, நளினி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத் தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்திய தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது, ஆளுநர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய  தீர்மானத்தின் மீது இதுவரை ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த தீர்மானத்தின் மீது அவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அமர்வில் வந்தபோது, தமிழக அரசின் வழக்கறிஞர், ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தர விட முடியாது என்றும், 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நளினியின் மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது பற்றிய தீர்ப்பை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close