[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு..!

accident-near-kallakurichi-9-dead

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்தும், சென்னையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற மினி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே புறவழிச்சாலையில் உள்ள ஏமப்பேர் என்கிற இடத்தில், இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதவிர, விழுப்புரம், சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குக்கு 5 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

உத்திரமேரூரில் இருந்து வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், காங்கேயத்தில் மின் கம்பம் நடும் பணிகளுக்காக சென்றபோது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. மேலும் பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன் தென்காசியைச் சேர்ந்தவர் என்பதும், மினி வேன் ஓட்டுநர் மணிகண்டன் மதுரையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் பற்றிய அடையாளம் இதுவரை எதுவும் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விபத்து வேன் ஓட்டுநரின் கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close