[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

“ஆலையால் மிகக் குறைவான பாதிப்பே உள்ளது”- ஸ்டெர்லைட் வாதம்..!

sterlite-argue-in-chennai-high-court

சுற்றுச் சூழல் அனுமதி உள்ளபோதும் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியுள்ளதாக வேதாந்தா நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதில், மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை முறையாக பின்பற்றிய போதிலும், ஆலையை முன் அறிவிப்பின்றி மூட தமிழக அரசு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையால் மிகக் குறைவான பாதிப்பே உள்ளது எனவும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே வழக்கில் அடுத்தவாரம் மூன்று நாட்கள் வாதங்களை முன்வைக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close