[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

மகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை - ஃபேஸ்புக் விபரீதம்

youth-attack-by-his-facebook-lover-s-father

சென்னை அம்பத்தூரில் ஃபேஸ்புக் மூலம் மகளிடம் பழகி ஏமாற்றிய வாலிபரை தந்தை ஒருவர் அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அம்பத்தூரில் சட்டக்கல்லூரியில் படித்து வந்தவர் மாணவி சத்யபிரியா. இவருக்கும் லாரன்ஸ் என்பவருக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சத்யபிரியாவை திருமணம் செய்துகொள்ள லாரன்ஸ் மறுத்ததாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை, காதலன் லாரன்ஸை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த லாரன்ஸை மீட்டு கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், மாணவியின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஃபேஸ்புக் மூலம் பழகி குடித்தனம் நடத்திவிட்டு மகளை ஏமாற்றியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close