[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

கோவையில் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வு

jalsakthi-scheme-officials-research-in-covai

வீடு, கல்லூரி உள்ளிட்ட கட்டடங்களில் எவ்வளவு ஆழ்துளை கிணறுகள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரங்கள் அரசுக்கு தெரிந்திருக்க வேண்டும் என மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். ஆழ்துறை கிணறுகளின் புள்ளிவிவரங்கள் இருந்தால் நீர் மேலாண்மை திட்டத்தை முறைப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக, ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி, 8 மத்திய அரசு இயக்குனர்கள், 8 தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள் குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து வருகின்றனர். 6ஆம் நாளான இன்று, கோவை சின்னவேடம்பட்டி ஏரியை மத்திய அமைச்சகத்தின் இயக்குநர் ஜெயசீலன், விஞ்ஞானி ஞானசுந்தரம் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

பின்னர் பேசிய ஜல்சக்தி அபியான் திட்ட இயக்‌குநர் ஜெயசீலன், பாரம்பரிய நீர் நிலைகள் மீட்டெடுத்தல், மழைநீர் சேகரிப்பு அதிகரித்தல், பயனற்ற ஆழ்குழாய் கிணறுகள் மீட்டெடுத்தல், நீர்ப்பிடிப்பு பகுதிகள் மேம்பாடு, மரம் வளர்ப்பு உள்ளிட்ட 5 குறிக்கோளுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close