[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

central-railway-station-s-kidnapped-baby-recovered-in-thiruporur

சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நீலாவதியின் என்பவரின் 3 வயது குழந்தை சோம்நாத் நேற்று இரவு செண்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த போது கடத்தப்பட்டார். இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குழந்தையை ஒருநபர் கடத்திச் செல்வது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் சென்ட்ரலில் இருந்து தாம்பரம் சென்று அங்கு இறங்கிச் செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்போரூரில் தனியாக நின்றுக் கொண்டிருந்த குழந்தையை ஒருவர் மீட்டெடுத்து, காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார். அதன் அடிப்படையில் குழந்தையை மீட்டு செங்கல்பட்டில் உள்ள அரசு காப்பகத்தில் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். நடைமுறைகளுக்குப் பின்னர் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close