[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

13 வயதில் மூன்று டிகிரிகள்: அமெரிக்காவை கலக்கிய தமிழகச் சிறுமி

madurai-child-completed-3-degrees-at-the-age-of-13

மதுரையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், பதிமூன்று வயதில் பள்ளிப்படிப்புடன் கல்லூரிப் படிப்பையும் தொடங்கி மூன்று டிகிரிகளை பெற்று சாதித்துள்ளார்.

துறுதுறுப்புடன் காணப்படும் சிறுமி ஸ்ரீயா, தனது குடும்‌பத்துடன் விடுமுறையை கழிக்க அமெரிக்காவில் இருந்து மதுரைக்கு வந்துள்ளார். சிறுமி ஸ்ரீயா தான், 13 வயதில் பள்ளிப்படிப்புடன் 3 டிகிரிகளையும் முடித்துள்ளவர். இவரது சகோதரன் பிரணவ் 4-ஆம் வகுப்பு படிக்கும்போதே கல்லூரிப் படிப்பையும் சேர்த்து படிக்கத் தொடங்கினார். தற்போது 16 வயதாகும் பிரணவ், தனது பத்தாம் வகுப்பு படிப்புடன் 4 டிகிரிகளை முடித்துவிட்டு நியூக்ளியர் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளார். சகோதரனின் படிப்பாலும் திறமையாலும் ஈர்க்கப்பட்ட ஸ்ரீயா, தனது 7 வயதில் இருந்தே பள்ளிப்படிப்புடன் கல்லூரி படிப்பை படிக்க ஆரம்பித்துவிட்டார்.

3 டிகிரிகளை முடித்த ஸ்ரீயா, ஸ்டான்போர்ட்டில் ரோபோக்கள் தொடர்பாக ஆராய்ச்சி மற்றும் கல்வியை தொடர உள்ளதாக கூறுகிறார். மேலும் தன்னைப் போல மற்றவர்களும் எளிதாக கற்கும் வகையில், யுடியூபில் கல்வி தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறார்.

மகன், மகள் இருவரும் ஆர்வத்துடன் கல்வியில் சாதிப்பது பெற்றோரை பெருமையடையச் செய்துள்ளது. அமெரிக்காவிலேயே 20 ஆண்டுகளாக இருந்தபோதும் தாய்மொழியை பிள்ளைகள் மறந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறும் ஸ்ரீயாவின் தாய், ஸ்ரீயா நன்றாக தமிழ்ப் பேசுவார் எனவும் கூறியுள்ளார்.

கல்லூரியில் மிகக் குறைந்த வயதுடைய மாணவி என்ற பெருமை பெற்றுள்ள ஸ்ரீயா, தினமும் தனது நேரத்தை திட்டமிட்டு செலவு செய்வதால் பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு, விளையாட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய முடிகிறது என்கிறார். படிப்பை சுமையாக கருதாமல் அறிவூட்டும் அம்சமாக பார்ப்பதால் இந்தச் சிறுமி இந்த வயதிலேயே அடுத்தடுத்த உயரங்களை எட்டிக்கொண்டிருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close