[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

chance-for-rain-in-two-days

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை நேற்றிரவு 8 மணியளவில் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால் சிறிது பாதிப்பிற்குள்ளாகினர்.

இதுதவிர திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகள், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், விழுப்புரம், ஈரோடு, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை நிலவி வரும் சூழலில், மழை பெய்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close