[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

இன்றைய முக்கியச் செய்திகள்

top-news-16072019

கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனிடைய முதலமைச்சர் குமாரசாமி சட்டப்பேரவையில் வரும் வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.

தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேசமயம், இந்த மசோதா அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை 8 வழிச்சாலை அமைக்கப்படும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுமட்டுமில்லாமல், சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் உறுதிபட கூறியுள்ளார்.

பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவிக்கின்றனர்.

மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் தோனி இடம்பெறுவாரா? என்ற சந்தேகம் நிலவும் நிலையில், வரும் 19-ஆம் தேதி வீரர்கள் பட்டியலை அறிவிக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close