[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை

rain-in-tamilnadu-including-chennai

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 

சென்னையில் கோயம்பேடு, நுங்கம்பாக்கம், பெரம்பூர், அண்ணா நகர், ஆவடி, கொளத்தூர், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. வடசென்னை பகுதியான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் கனமழை பெய்தது. வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்துள்ளதாகவும் அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதேபோல் திருத்தணியில் பெய்த மழையால் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது ஓடியது. மழை நீருடன் கழிவு நீர் கலந்ததால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியான புதுப்பாளையம், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரம், ‌ ஈரோடு, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்த நிலையில் விவசாயிகள், பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close