[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

தபால்துறை போட்டித்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு - சட்டப்பேரவையில் காரசார விவாதம் 

in-the-postal-contest-a-legal-debate-on-tamilnadu-assembly-was-held

தபால்துறை போட்டித்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி, மத்திய அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.

தபால் துறை போட்டித்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தமிழர்கள் மத்திய அரசுப் பணியில் சேரக்கூடாது என திட்டமிட்டு மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், தமிழ் மொழியை மீண்டும் சேர்க்க மாநில அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் எனக் கோரினார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடு அரசு, இந்த விவகாரம் குறித்து நிச்சயம் மத்திய அரசை வலியுறுத்தும் என்று கூறினார். பின்னர் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், இரு மொழிக் கொள்கையில் ஒருமித்த கருத்து கொண்டிருக்கிறோம், அதே வேளையில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றுமா எனக் கேள்வி எழுப்பினார். 

அப்போது குறுக்கிட்டுப் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இந்த விவகாரம் குறித்து நாளை நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப இருக்கிறார்கள், இதற்கு மத்திய அரசு கொடுக்கும் பதிலைப் பொறுத்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என பதிலளித்தார். பிறகு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக இந்த விவகாரத்தில் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசி வருவதாகக் கூறினார்.

இதனிடையே தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து அரசு உறுதியான பதில் அளிக்கவி‌ல்லை என்றும், உணர்வோடு பேசும் திமுகவை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பேசியதாகவும் கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close