[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

சென்னையில் 13 இடங்களில் மேம்பாலங்கள் - முதலமைச்சர்

chief-minister-said-13-bridges-in-chennai

சென்னை பெருநகர பகுதிகளில் 13 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நெடுஞ்சாலைத்துறையில் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய கைலாஷ் உள்ளிட்ட 13 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். சென்னை பெருநகர பகுதிகளில் பாலங்கள் அமைக்க ரூ.1, 122 கோடியில் நிலம் கையகப்படுத்தப்படும். 13 மேம்பாலங்கள், 2 ரயில்வே பாலங்கள், 2 நடை மேம்பாலங்கள், 1 ஆற்றுப் பாலம் அமைக்கப்படும். சேலையூர், கொரட்டூர், வடபழனி, மத்திய கைலாஷ், மடிப்பாக்கம் உள்ளிட்டவையும் அந்த 13 இடங்களில் அடங்கும்.

மெரினாவில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப்பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். நடப்பாண்டில் ரூ. 300 கோடி மதிப்பில் சாலை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை டைடல் பார்க் சந்திப்பில் 2 ‘யு’ வடிவ மேம்பாலங்கள் ரூ. 110 கோடியில் கட்டப்படும். 

பழனியில் தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்லும் சாலையில் ரூ. 58. 50 கோடியில் மேம்பாட்டுப் பணிகள். சென்னை பெருநகர பகுதியில் ரூ. 299 கோடி மதிப்பில் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படும். 9 மாவட்டங்களில் 32 இடங்களில் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப்பாலங்கள் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். 17 மாவட்டங்களில் ரூ155. 80 கோடியில் 42 ஆற்றுப்பாலங்கள் கட்டப்படும். 1,456 கி.மீ நீள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர  சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் மூலம் தஞ்சை மாவட்டத்தில் சாலைகள் பராமரிக்கப்படும். பாடி குப்பத்தில் உயர்மட்டப்பாலம், கேந்திரி வித்யாலயா, தாம்பரத்தில் நடைமேம்பாலம் அமைக்கப்படும். 10 நகரங்களில் புறவழிச்சலைகள் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் புதிதாக 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close