[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

திமுகவில் இணைகிறார் வேலூர் ஞானசேகரன்

ex-congress-leader-gnanasekaran-to-join-dmk-today

வேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ, சி.ஞானசேகரன், திமுகவில் இன்று இணைகிறார்.

வேலூர் தொகுதி முன்னாள்  காங்கிரஸ் எம்.எல்.ஏ சி.ஞானசேகரன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார். பின் அந்தக் கட்சியின் அமைப்பு செயலாளராகவும் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து அவர் திமுகவில் இணைகிறார். அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகி வரும் நிலையில் ஞானசேகரனும் அந்தக் கட்சியில் இருந்து விலகுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close