[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

புள்ளி மானை வேட்டையாடியவர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

4-arrested-for-hunting-deer-in-erode

ஈரோடு மாவட்டம் பண்ணாரி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 4 பேருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில், சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ரோந்து சென்ற வனத்துறையினர் வேட்டையில் ஈடுபட்டிருந்த நால்வரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களது காரை சோதனையிட்ட போது அதில் புள்ளி மானை வேட்டையாடி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதன் தொடர்ச்சியாக, மானின் உடலையும் அதை‌ வேட்டையாடப் பயன்படுத்திய இரட்டைக்குழல் துப்பாக்கியையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வேட்டையாடலில் ஈடுபட்ட பூபதி, கார்த்திக், சதாசிலம், ஸ்ரீதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நால்வரையும் மாவட்ட வனஅலுவலர் அருண்லால் முன்னிலையில் ஆஜர்படுத்தியதில், தலா ஒன்றே கால் லட்சம் வீதம் மொத்தம் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close