[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

முதல் மாதச் சம்பள அனுபவம் - ஹேஷ்டேக் ட்ரெண்டிங்

first-salary-hashtag-trending

பிறந்த நாளை, நம் ஒவ்வொருவராலும் எப்படி மறக்க முடியாதோ அப்படி ஒரு ஒருநாள் தான் நாம் முதல்முறையாக சம்பளம் வாங்கும் நாள். முழுக்க முழுக்க நம் உழைப்பில் வரும் பணத்தை முதல் முறையாக கையில் ஏந்தும் தருணத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க மாட்டார்கள்.

படிக்கும் காலங்களில் பகுதி நேரமாக வேலைக்கு சென்றவராக இருந்தாலும், படித்து முடித்து முதல்முறையாக ஐடியில் வேலைக்கு சேர்ந்தவராக  இருந்தாலும் முதல் மாத ஊதியம் தரும் சுகமே தனிதான். அந்தச் சம்பளத்தை வாங்கியவுடன் நமக்கே ஒருவித சொல்ல முடியாத சந்தோஷம் வரும். பெரிய மனிதராக உணர்வோம். அம்மா.. அப்பாவுக்கு என நம்மால் முடிந்ததை அந்த ஊதியத்தில் வாங்கிக் கொடுப்போம்.

இப்படி சுக அனுபவம் வாய்ந்த முதல் மாத ஊதியம் குறித்து பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.  #FirstSalary என்ற ஹேஷ்டேக்கில் பலரும் தாங்கள் பெற்ற முதல் மாதச் சம்பளம் குறித்தும் முதல் வேலை குறித்தும் பகிர்ந்து வருகின்றனர். இன்று லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் கூட முதன்முறையாக வாங்கிய சம்பளம் என்னவோ, நூறோ.. ஐந்நூறோ.. அப்படித்தான் இருக்கிறது..

சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று ட்ரெண்டாகுவது வழக்கம்தான் என்றாலும் இன்றைய  #FirstSalary ட்ரெண்ட்டிங்கில் பலரும் பங்கேற்று தங்களது முதல்மாத சம்பளம் குறித்து பகிர்ந்து வருகின்றனர். அதில் சில...

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close