[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

3 மாதங்களில் தனித் தேர்வு கொள்கைகளை வகுக்க நீதிமன்றம் உத்தரவு

chennai-high-court-ordered-to-tn-government-to-make-separate-exam-pattern-for-transport-workers

அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களை தேர்வு செய்ய 3 மாதங்களில் தனி தேர்வு கொள்கைகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐடிஐ ஃபிட்டர் படிப்பை முடித்து, போக்குவரத்து கழகத்தில் பயிற்சி பெற்ற திருநெல்வேலியை சேர்ந்த மாற்றுத் திறனாளி கோவைசாமி என்பவர், தனக்கு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்க உத்தரவிடக் கோரி வழக்குத் தொடர்ந்தார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 22 ஆண்டுகள் கடந்தும்,  இதுவரை தனக்கு நேர்முக தேர்வுவிற்காக எந்தக் கடிதமும் வரவில்லை என்பதால், போக்குவரத்து கழகத்தில் பயிற்சிப் பெற்ற தனக்குப் பணி வழங்க மனுவை பரிசீலிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, போக்குவரத்து கழகங்களில் உரிய முறையில் விளம்பரம் கொடுக்காமல் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும்,  தேர்வு நடைமுறைகள் ஏதும் இல்லை என்றும் கூறி, அரசு பணியாளர் தேர்வாணையம் அல்லது வேறு அமைப்பின் மூலம் எழுத்து தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், நடத்துநர்கள், ஓட்டுநர்கள், இளநிலை உதவி பொறியாளர்கள், பணியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயித்து தேர்வுகள் மேற்கொள்வதாகவும், இவர்களின் கல்வி தகுதி, வயது, அனுபவம் உள்ளிட்ட தகுதிகளை பரிசீலித்து செயல்முறை தேர்வு நடத்திய பிறகே பணிக்கு தேர்வு செய்யப்படுவதாக அந்த மேல்முறையீடு மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் தொடர்விசாரணை நடந்தது.

பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசுப் பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை பின்பற்ற வேண்டும் எனவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய விளம்பரங்களை வெளியிட்டு, தகுதியுடைய அனைவரையும் போட்டியிட அனுமதித்து பணியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து துறையில், பணியாளர்கள் தேர்விற்கு உரிய நடைமுறையை உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த நடைமுறைகளை ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், போக்குவரத்துத்துறை பணியாளர்கள்  தேர்விற்கு 3 மாதங்களில் தனித் தேர்வு கொள்கைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர். மனுதாரருக்கும் இந்தத் தேர்வில் கலந்துக் கொள்ள ஏதுவாக வயது வரம்பை தளர்த்தி அனுமதிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close