[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஓராண்டு சிறையை எதிர்த்து வைகோ மேல்முறையீடு 

vaiko-appeals-against-one-year-in-prison

தேசத்துரோக வழக்கில் வழங்கப்பட்ட ஓராண்டு சிறையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோவிற்கு எதிராக தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோவிற்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தீர்ப்பு குறித்து பேசிய வைகோ, “இன்று எனக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியான மற்றும் முக்கியமான நாள். தண்டனை குறித்து அறிவித்ததும் விரைவில் அறிவியுங்கள் என்று கேட்டேன். குறைந்தபட்ச தண்டனை கொடுங்கள் என நான் கேட்டதாக நீதிபதி கூறியது தவறு. அதிகபட்ச தண்டனை கொடுங்கள் என்றுதான் நீதிமன்றத்தில் வாதிட்டேன்” எனத் தெரிவித்தார். 

இந்நிலையில், தேசதுரோக வழக்கில் வழங்கப்பட்ட ஓராண்டு சிறையை எதித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுவில் “தனக்கு எதிரான தீர்ப்பு சட்டவிரோதமானது. சட்டப்படி வழங்காமல் சிறப்பு நீதிமன்றம் தனக்கு தெரிந்த விஷயங்களை வைத்து தீர்ப்பளித்துள்ளது. எனக்கு எதிரான குற்றச்சாட்டில் முழுமையான ஆதாரம், சாட்சி இல்லாத நிலையில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது. எனவே ஓராண்டு சிறையை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். வைகோவின் இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close