[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வந்தது குடிநீர் ரயில்  

drinking-water-train-arrives-chennai

ஜோலார்பேட்டையில் இருந்து காலை 7 மணியளவில் கிளம்பிய குடிநீர் ரயில் தற்போது சென்னை வில்லிவாக்கத்திற்கு வந்துள்ளது. 

ஜோலார் பேட்டையில் இருந்து நாள்தோறும் ஒரு கோடி லிட்டர் குடிநீரை சென்னை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மேட்டுசக்கரகுப்பத்தில் இருந்து பார்சம்பேட்டை வழியாக ஜோலார்பேட்டைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அதன்படி தற்போது முதல்கட்டமாக ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் குடிநீருடன் சென்னைக்கு இன்று காலை 7 மணியளவில் ரயில் புறப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் கொடியசைத்து ரயிலை அனுப்பி வைத்தார். 

வாழைத் தோரணங்கள், மலர் அலங்காரங்களுடன் பூஜைக்கு பிறகு குடிநீர் ரயில் புறப்பட்டது. 5 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரத்திற்குள் இந்த ரயில் சென்னை வில்லிவாக்கம் வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வில்லிவாக்கம் வந்தடைந்துள்ளது. ரயிலின் 50 வேகன்களிலும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீர் நிரப்பப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டையில் இருந்து வரும் ரயில் பெங்களூர் - சென்னை வழித்தடம் வழியாக வில்லிவாக்கத்துக்கு வந்தது. 

வில்லிவாக்கத்தில் இருந்து கீழ்பாக்கம் நீரேற்று நிலையத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்படும். நீரேற்று நிலையத்தில் சுத்தகரிக்கப்பட்டு சென்னை மக்களின் பயன்பாட்டுக்காக இன்றே குடிநீர் விநியோகிக்கப்படும் எனத் தெரிகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close