[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

முதல்வர் குறித்த அவதூறு பேச்சு: வழக்கை ரத்து செய்ய ஸ்டாலின் மனு

mk-stalin-filed-petition-to-dismission-defamtion-case-against-him

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில்,  கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக எனக்கு எதிராக அரசு வழக்கறிஞர் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி ஒரு கொடுமையான நிலையில் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது உள்ள ஆட்சியை பொறுத்தவரைக்கும் இருக்கக்கூடிய பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பதவி போய்விட்டால் கொள்ளையடிக்க முடியாது, பதவி போய்விட்டால் அமைச்சராக இருக்க முடியாது, ஊழல் செய்ய முடியாது. எனவே அந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க கூடிய நிலையில்தான் இந்த ஆட்சி உள்ளது. 

இன்றைக்கு கொலைப் பழி சுமத்தப்பட்ட நிலையில் உள்ள ஒரு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எனவே விரைவில் அவர் சிறைக்கு போக கூடிய ஒரு சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது”எனப் பேசியதாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எவ்விதமான முகாந்திரமும் இல்லாத நிலையில், திமுக மீதான அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக உள்நோக்கத்துடன் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பதை கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள தவறி விட்டது. பேச்சுரிமை, கருத்துரிமை போன்றவை இருப்பதையும் கீழமை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. ஆகவே என் மீதான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் விசாரணைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டதோடு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என ஸ்டாலின் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close