[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

விபத்திற்கு காரணமான தந்தை - போலீஸ் முன்பே போராட்டக்காரர்கள் மீது காரை ஏற்றிய மகன் 

bike-accident-in-covai-kallippalaiyam

கோவை மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்தை ஏற்படுத்தியவரின் மகன் காவல்துறையினரின் முன்பே போராட்டக்காரர்கள் மீது காரை ஏற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோட்டைக்காட்டைச் சேர்ந்த பாபு என்பவர் மது போதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார். கள்ளிப்பாளையத்தில் பாபு ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ரங்கசாமி என்பவர் மீது மோதியது. இதனையடுத்து பாபு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காரில் அங்கு வந்த பாபுவின் மகன் ஹரிபிரசாத் தந்தையை அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஹரிபிரசாத்தின் காரை முற்றுகையிட்டனர். அப்போது காவல்துறையினர் முன்னிலையிலேயே போராட்டக்காரர்கள் மீது காரை ஏற்றிவிட்டு ஹரிபிரசாத் தப்பிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து இருதரப்பிற்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் கள்ளிப்பாளையத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close