[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

நந்தினியை சொந்த பிணையில் விடுவித்து நீதிபதி உத்தரவு

court-gave-bail-to-nandini

மதுக்கடைகளுக்கு எதிராக போராடி வரும் நந்தினியை சொந்த பிணையில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு, அரசு மதுபானக் கடைகளை நடத்துவதை எதிர்த்து காவல்துறை அனுமதி இல்லாமல் நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் துண்டு பிரசுர வினியோகத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறை அனுமதி இல்லாமல் வினியோகம் செய்ய கூடாது என்று தடுத்த காவல்துறையினரை எதிர்த்து, நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக இருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை கடந்த மாதம் 27-ம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நந்தினி அவரது தந்தை ஆனந்தன் நேரில் ஆஜராகினர். அப்போது நடைபெற்ற வாதத்தில், “மதுபானம் என்ன உணவுப் பொருளா? மருந்து பொருளா..? போதைப் பொருள் என்றால் அதை விற்கும் அரசு குற்றவாளி... இதனைக் கேட்ட எங்கள் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது” என்று பேசி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகிய இருவரும் நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதியப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவ்வழக்கின் மேல் விசாரணைக்காக நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் இருவரும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா, நந்தினி மற்றும் அவரது தந்தை இருவரையும் சொந்த பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.  மேலும் சட்டத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்றும், போராடுவது சரிதான் ஆனால் போராட்ட முறை தவறு என்றும் நந்தினிக்கு அறிவுரை வழங்கினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close