[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

tamilisai-soundararajan-case-filed-against-kanimozhi-victory

தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களம் கண்டார். தேர்தல் முடிவில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் கனிமொழியின் வேட்புமனுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், அதனைச் சுட்டிக்காட்டிய பின்னரும் கூட புகார் குறித்து தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆரத்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாகவும் தமிழிசை தனது மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close