[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

வைகோ மனு ஏற்கப்படுமா ? - மாற்று ஏற்பாடாக திமுகவின் இளங்கோ மனு

will-dmdk-vaiko-petition-accepted-dmk-ilango-file-petition-safety

மாநிலங்களவை உறுப்பினருக்கான வைகோவின் மனுவை ஏற்காவிட்டால், மாற்று ஏற்பாடாக திமுகவின் இளங்கோ மனு தாக்கல் செய்கிறார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தேசத்துரோக வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2009ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோவிற்கு எதிராக தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வெளிவந்துள்ளது. அதன்படி வைகோவிற்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அது நிறுத்தி வைக்கப்பட்டது. 

இதற்கிடையே திமுக சார்பில் மதிமுவிற்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வைகோ தேர்வு செய்யப்படயிருந்தார். அவர் சிறை தண்டனை பெற்றிருப்பதால், அவர் எம்.பி ஆக முடியுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் வைகோ மனு தாக்கல் செய்யலாம், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதில் சிக்கல் இருக்காது எனப்பட்டது.

இதையடுத்து கடந்த 6ஆம் தேதி வைகோ மனு தாக்கல் செய்தார். அவருடன் மற்ற வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்றதால் ஒருவேளை வைகோ மனுவை மற்ற கட்சியினர் எதிர்க்கலாம் என்றும், அதன்மூலம் நிகாரிக்க வாய்ப்பு ஏற்படலாம் எனவும் பேசப்படுகிறது. இதனால் மாற்று ஏற்பாடாக திமுகவை சேர்ந்த இளங்கோ இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். வைகோ மனு ஏற்கப்படும் பட்சத்தில், இவர் மனுவை வாபஸ் பெறுவார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close