[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்

குடியரசு தின விழா கொண்டாட்டம்: மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ரோசய்யா

rosaiya-tied-the-indian-flag

நாட்டின் 67ஆவது குடியரசு தினம் சென்னையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் ஆளுநர் ரோசய்யா தேசியக் கொடியை ஏற்றினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா , வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

67ஆவது குடியரசு தினவிழா கொண்டாட்டம் சென்னையில் களைகட்டின. ஆளுநர் ரோசய்யா சென்னை கடற்கரை சாலையில் உள்ளபோர் நினைவுச் சின்னத்திற்கு சென்று, போர்களில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அங்கிருந்து குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக சென்னை மெரினா கடற்கரை சாலைக்கு வந்த ஆளுநர் ரோசய்யாவை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வரவேற்றார். அதன்பின்னர் ஆளுநர் ரோசய்யா, தேசியக் கொடியை ஏற்றினார்.

தேசியக் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறையினரின் அணிவகுப்பும் நடைபெற்றன. வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ரோசய்யா ஏற்றுக்கொண்டார்.

அணிவகுப்பு மரியாதையை அடுத்து, வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், மதநல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் பதக்கம் உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். விருதுநிகழ்வைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close