[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

நடத்துநரை கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது

two-arrested-in-conductor-murder-case

கடலூர் அருகே தனியார் பேருந்து நடத்துநரை கொலை செய்த வழக்கில் ஆசிரியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். பேருந்து நடத்துநரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் மனக்குப்பம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதனிடையே கோவிந்தராஜ் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ராஜ்முருகன், அவரது சகோதரர் ராஜசிம்மன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

ராஜ்முருகன் காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கும் கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜுக்கும் இடையே உறவு இருந்ததாகவும், பின்னர் அப்பெண் கணவரைப் விட்டு பிரிந்து கோவிந்தராஜுவுடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்முருகன் தனது சகோதரனுடன் சேர்ந்து கோவிந்தராஜை கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close