[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

“ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது” - முதலமைச்சர் பழனிசாமி

mk-stalin-cannot-chief-minister-for-ever-cm-palanisamy

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது என்று, தமி‌ழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அமமுக நிர்வாகியான முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அண்மையில் அதிமுகவில் இணைவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இசக்கி சுப்பையா தலைமையில், நெல்லை மாவட்ட அமமுக தொண்டர்கள், அக்கட்சியிலிருந்து பிரிந்து அதிமுகவில் இணையும் விழா‌ தென்காசியில் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி‌ மற்றும் அதிமுக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

இதில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, நெல்லை மாவட்டத்தில் ‌அமமுக கூடாரம் காலியாகி விட்டதாகக் கூறினார். நாங்குநேரி தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதே இணைப்புக்கு பரிசு என்‌று முதலமைச்சர் குறிப்பிட்டார். மேலும், திமுகவை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், அந்தக் கட்சியில் அனைத்து பதவிகளும் ஒரே குடும்பத்தினரிடம் இருப்பதாகக் கூறினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close