[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-top-news-07-07-2019

காணாமல்போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் 140 நாட்களுக்குப் பிறகு திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டார். தற்போது தமிழக சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், சென்னை கொண்டுவரப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் செய்கின்றனர். தண்ணீர் எடுக்க பல இடங்களில் அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

ஸ்டாலின் என்ன செய்தாலும் தமிழக முதலமைச்சர் ஆகமுடியாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அமமுகவின் இசக்கி சுப்பையா அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பான முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியின் மூலம், ஒரே உலகக்கோப்பை தொடரில் 5 முறை சதம் அடித்தவர் என்ற புதிய சாதனையை ரோகித் ஷர்மா படைத்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close