[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - கைதான 9 பேர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு

9-member-arrested-pocso-act-for-school-girl-sexual-abuse-in-pollachi

பொள்ளாச்சியில் 16 வயது பள்ளி மாணவியை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், கைது செய்யப்பட்ட 9 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அமானுல்லா அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அமானுல்லாவின் நண்பர்களுக்கு தெரிந்ததால், தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Image result for பாலியல் வன்கொடுமை

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேற்று பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலிப்பதாக கூறி தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி அவர்களது நண்பர்களுக்கும்  பாலியல் வன்கொடுமையில் உட்படுத்தியதாக புகார் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த மகளிர் காவலர்கள் காதலிப்பதாக கூறிய அமானுல்லாவை பிடித்து விசாரணை செய்தபோது, காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி வன்கொடுமையில் உட்படுத்தியதை ஒத்துக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து இதில் சம்பந்தபட்ட அமானுல்லா நண்பர்களான பகவதி, முகமதுஅலி, டேவிட்செந்தில் முகமது ரபிக், அருண் நேரு, சையது முகமது,  இர்ஷாத் முகமது, இர்ஷாத் பாட்சா ஆகிய 9 பேரையும் கைது செய்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர். இதில் தலைமறைவாக உள்ள திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பிரபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Image result for பாலியல் வன்கொடுமை

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இந்த ஒன்பது பேரும் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து, கோவை மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட உள்ளதாக பொள்ளாச்சி மகளிர் காவல்துறையினர் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் மீண்டும் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close