[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

தீ விபத்தில் தாய், மகள் மரணம் - சொத்துக்காக குடும்பமே கூடி கொன்றது அம்பலம்..!

family-killed-mother-and-daughter-in-land-dispute-case

(கொலை செய்யப்பட்டவர்கள்)

சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் குடிசை தீப்பிடித்து எரிந்து, தாய் மகள் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்காக குடிசைக்கு தீ வைத்து தாய், மகளை கொலை செய்தததாக 4 பெண்கள் உட்பட 7 உறவினர்களை தாளவாடி போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்த நாகண்ணா என்பவரது மனைவி ராஜம்மாள் (வயது 40.) நாகண்ணா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  இறந்துவிட்டதால் ராஜம்மாள் விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மாதேவ பிரசாத் (வயது 20) என்ற மகனும் கீதா (18) என்ற மகளும் உள்ளனர். ராஜம்மாள் தனது மகள் மற்றும் மகனுடன், அதே ஊரில் உள்ள தனது தாய் தந்தை வசித்து வந்த வீட்டில் இருந்தபடி கூலி வேலைக்கு சென்று வந்தார்.

(கைது செய்யப்பட்டவர்கள்)

இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜம்மாள், அதே ஊரில் ஒதுக்குப்புறமாக உள்ள தனது இடத்தில் தனியாக குடிசை அமைத்து குடியேறியுள்ளார். மகன் மாதேவ பிரசாத் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கேரளாவிற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில்  ராஜம்மாளின் குடிசை வீடு முற்றிலும் தீப்பிடித்து எரிந்த நிலையில் ராஜம்மாள், கீதா இருவரும் தீயில் கருகி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தாளவாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இருவரின் உடல்களும் தீயில் கருகிய நிலையில் இருந்தது. இதனால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர் குமரவேல் என்பவர், சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அங்கேயே  பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

(கைது செய்யப்பட்டவர்கள்)

இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது சொத்து பிரச்னை காரணமாக குடிசை வீட்டில் தீ வைத்து இருவரும் கொல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜம்மாளின் தந்தை, ராஜம்மாளின் தாயார்  சிவமல்லம்மா, ராஜம்மாளின் மாமியார் தொட்டமாதம்மா, ராஜம்மாளின் தம்பி பிரேஸ், உறவினர்கள் மாதேவம்மா, நாகரத்தினா, லிங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த ராஜம்மாள், கீதாவுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அபகரிக்க தீவைத்து கொல்லப்பட்டதாக வாக்குமூலத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close