[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

தேசத் துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பு

vaiko-convicted-in-sedition-charge-case

தேசத் துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் அவருக்கு ஓராண்டு சிறையும், 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற 'நான் குற்றம்சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவரின் பேச்சு, மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததாக கூறி வைகோ மீது தேச துரோக ‌வழக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினரால் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட வைகோ மே 25-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

பின்னர் இந்த வழக்கு சென்னை சென்னை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு 2018 ஆகஸ்ட் 2-ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எம்.பி.,எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டவுடன், இந்த வழக்கு அங்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக ஜூன் 19-ஆம் தேதி நீதிபதி ஜெ.சாந்தி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் வழக்கின் தீர்ப்பை சென்னை சிறப்பு நீதிமன்றம் ‌இன்று வழங்கியது.

அதன்படி வைகோவை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து வைகோ மேல்முறையீடு செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close