[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள் யார் யார் தெரியுமா..?

today-union-budget-present-by-nirmala-sitharaman

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இதன் மூலம் பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இது தவிர பட்ஜெட் தாக்கல் செய்யும் 6-வது தமிழர் என்ற பெயரையும் நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவரே ஒரு தமிழர்தான். 1947-ல் சுதந்திரத்திற்கு பின் பதவியேற்ற ஜவகர்லால் நேரு அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். 1947-ம் ஆண்டு நவம்பரில் முதல் பட்ஜெட்டை ஆர்.கே.சண்முகம் செட்டியார் சமர்ப்பித்தார். இதன் பின் நேரு அமைச்சரவையில் நிதியமைச்சராக இடம் பெற்ற டி.டி.கிருஷ்ணமாச்சாரி 1957, 1958, 1964, 1965 ஆகிய ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இவரது முதல் பட்ஜெட்டில்தான் வரி தொடர்பான முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த சி.சுப்பிரமணியம் 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் இடம் பெற்று அப்போதைய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 1980-ம் ஆண்டு பொது தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்று பிரதமர் ஆன நிலையில் தமிழகத்தின் ஆர்.வெங்கட்ராமனை நிதியமைச்சராக நியமித்தார். 1980 மற்றும் 1981ம் ஆண்டில் இவர் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் 1997-ம் ஆண்டு முதன்முறையாக மத்திய நிதியமைச்சர் ஆனார். அந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட் கனவு பட்ஜெட் என அழைக்கப்படுகிறது. பொருளாதார சீர்திருத்தங்களை முடுக்கிவிடப்பட்டதுடன் வருமான வரி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டன. இதன் பின் அவர் 8 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் பட்டியலில் மொரார்ஜி தேசாய்க்கு அடுத்த இடத்தை ப.சிதம்பரம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதன்மூலம் பட்ஜெட் தாக்கல் செய்யும் 6-வது தமிழர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close