[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் : முதியவருக்கு 14 ஆண்டுகள் சிறை

55-year-old-man-got-14-years-jail-for-child-abuse-case-in-tiruppur

திருப்பூரில் 5 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 55 வயது முதியவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரது 5 வயது மகள், கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமிக்கு 55 வயது முதியவர் மகாதேவன் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார். 

சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த திருப்பூர் மகிளா நீதிமன்றம், இன்று மகாதேவனுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close