[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதிக்கு தலைவர்களின் வாழ்த்து

udayanidhi-stalin-appointed-youngster-secretary-politicians-wishes

திமுக இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக இளைஞர் அணி செயலாளராக உள்ள சாமிநாதன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக திமுக சட்டதிட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி, உதயநிதி ஸ்டாலின், அப்பொறுப்பில் நியமிக்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது. 

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் மேளங்கள் இசைத்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி, தனது தந்தையும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியோடு வரவேற்கதக்கது என அந்த கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். புதியதலைமுறையிடம் தொலைபேசி மூலம் கருத்து தெரிவித்த அவர், திமுகவை நோக்கி இளைஞர்களை ஈர்க்கும் ‌வகையில், உதயநிதி இளைஞரணி செயலாளராக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதன்மூலம் புதிய ரத்தம் பாய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மு.க.ஸ்டாலின் செயலாற்றியது போல, திமுகவின் இளைஞர் அணிச்‌செயலாளராக உதயநிதி ஸ்டாலின் வழிநடத்திச் செல்வார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், மிக்க மகிழ்ச்சியையும், உதயநிதிக்கு பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கியது மிகுந்த மகிழ்ச்சி எனவும், பொது வாழ்வில் உதயநிதி ஸ்டாலின் மேலும் வளர வேண்டும் எனவும் வாழ்த்தியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close