[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

குனிந்து கும்பிட்டு பதவியை பெற்றது யார்? : பேரவையில் திமுக, அதிமுக காரசார விவாதம் 

there-was-an-interesting-debate-of-dmk-and-aiadmk

சட்டப்பேரவையில் இன்று திமுக, அதிமுகவிடையே "குனிந்து கும்பிட்டு பதவியை பெற்றது யார்?" என்பது குறித்து சுவாரஸ்யமான விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி தமிழகத்தின் எதிர்கால தலைமை மு.க.ஸ்டாலின் தான் என கூறினார். செந்தில்பாலாஜியின் இந்த பேச்சுக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர்  “யாரிடமும் குனிந்து, கும்பிட்டு மு.க.ஸ்டாலின் பதவியை பெறவில்லை” என்று செந்தில்பாலாஜி கூறினார். 

Image result for senthil balaji in assembly

அப்போது குறுக்கிட்ட முதல்வர் பழனிசாமி “குனிந்து பதவியை பெற்றார்கள் என எங்களை தொடர்புபடுத்தி செந்தில்பாலாஜி பேசியது தவறு” என்று கூறினார். மேலும்  “ஜெயலலிதாவை பார்த்து செந்தில்பாலாஜி எத்தனை முறை குனிந்து கும்பிடு போட்டார் என எங்களுக்கு தெரியும்” என துணை முதலவர் ஓபிஎஸ் கூறினார். அதற்கு அதிமுக பிளவுபட்டபோது ஓபிஎஸ் பேசியதை தற்போது நான் குறிப்பிட்டால் என்னவாகும்? என கேள்வி எழுப்பினர். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close