[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

தெர்மாகோல் தொழிற்சாலையில் கடும் தீ விபத்து

fire-accident-in-thermocol-factory-in-maduravoyal

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் அமைந்துள்ள தெர்மாகோல் தொழிற்சாலையில் கடும் தீ விபத்து ஏற்பட்டது. 

சென்னை ஆலப்பாக்கம் சீமாத்தம்மன் கோயில் தெருவில் தெர்மாகோல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு திடீரென கடும் தீ விபத்து ஏற்பட்டது. தெர்மாகோல் அதிகம் இருந்ததால் தீ அனைத்து பகுதிகளுக்கும் மழமழவென பரவியது. 

இதை அடுத்து அப்பகுதியில் மிகுந்த பதற்றம் ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது. தகவல் அறிந்து மதுரவாயல், கோயம்பேடு, விருகம்பாக்கம் ஆகிய மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

‌தீ விபத்தினால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close