[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

''மகளின் முடிவே முக்கியம்: வனிதாவின் கைது குறித்து மாலை முடிவு'' - போலீசார்

police-at-house-to-arrest-actress-vanitha-vijayakumar

வனிதா மீதான ஆள் கடத்தல் புகாரில் அவரின் மகளிடம் கருத்தைக் கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர்

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவருக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007ல் திருமணமானது. அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு வனிதாவுக்கும் ஆனந்தராஜுக்கும் இடையே விவாகரத்தானது. அவர்களது மகள் ஜோவிதா, தந்தையான ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வந்தார். 

கடந்த பிப்ரவரி மாதம் வனிதா தனது மகள் ஜோவிதாவை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சென்னையில் ஆனந்தராஜ் கொடுத்த குழந்தை கடத்தல் புகாரில், இன்று சென்னையிலுள்ள பிக்பாஸ் வீட்டில் வனிதாவை விசாரிப்பதற்கு தெலங்கானா போலீஸ் சென்றது. இந்த விசாரணைக்கு தெலங்கானா போலீசார் சென்னை நசரத்பேட்டை போலீசாரின் உதவியுடன் விசாரணைக்கு சென்றுள்ளனர். இந்த விசாரணை இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வனிதாவின் மகளிடம் கருத்தைக் கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மகள் தாயுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா? அல்லது தந்தையுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா? என்பதை பொறுத்தே வனிதாவின் கைது குறித்து முடிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை வனிதாவின் கைது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close