[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

சட்டமன்றம் - முதல்வரை புகழ்ந்த எதிர்கட்சி துணை தலைவர்

durai-murugan-praise-cm-palanisamy

சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலளிப்பதை பார்த்து தானே அசந்து போய்விட்டதாக எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிவுற்றதாக சபாநாயகர் அறிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “ கேள்வி நேரத்தை குறைத்து கொள்ளலாமா என நேற்று கேட்டேன், ஆனால் குறைத்துக்கொள்ள முடியாது என சொன்னீர்கள், நானும் ஒத்துக் கொண்டேன்.

இதற்கு முன்னர் இருந்த ஆட்சிக் காலத்தில் கேள்வி நேரத்தில் காவல்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை தொடர்பான கேள்விகள் கட்டாயம் இடம் பெறும். ஆனால் நீண்ட காலமாக இந்தத் துறைகளில் கேள்விகள் வருவதில்லை. முதல்வர் ஒன்றும் பதில் சொல்ல முடியாதவர் அல்ல; அவர் நன்கு தேறிவிட்டார்.  அவர் பதிலளிப்பதை பார்த்து நான் பலமுறை அசந்து போய் இருக்கிறேன். அந்த அளவுக்கு சிறப்பாக பதிலளிப்பவர். எனவே, நாளை முதல், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்று காவல்துறை தொடர்பான கேள்விகள்  இடம் பெறும் என எதிர்பார்க்கிறேன்”எனப் பேசினார்.

அவருக்குப் பதிலளித்த துணை முதல்வரும் அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம், “முதல்வர் வகித்து வரும் அனைத்து துறைகளிலும் நீங்கள் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க அவர் தயாராகவே இருக்கிறார். இனி முதல்வரின் துறைகளிலும் கேள்விகள் இடம் பெறும்”  எனப் பதிலளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close