[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது - சி.வி.சண்முகம்

tamilnadu-govt-will-not-give-permission-to-hydrocarbon-projects-minister-c-v-shanmugam-tells-in-tn-assembly

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான எந்தத் திட்டத்துக்கும் எந்தக் காலத்திலும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்று  அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் சுற்று அனுமதியில் நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 14 வட்டாரங்களிலும், மூன்றாம் சுற்று அனுமதி‌‌யில் 18 வட்டாரங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க திறந்தவெளி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூடுதலாக பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் திமுக சார்பில் கொண்டு வரப்பட்டது.

      

இந்தத் தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான எந்தத் திட்டத்துக்கும் எந்தக் காலத்திலும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், “மத்திய அரசே அனுமதி அளித்தாலும் தமிழக அரசு அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அனுமதியையே அதிமுகதான் ரத்து செய்தது” என்று கூறினார். அத்துடன் மக்களை தூண்டி போராட்டம் நடத்தப்படுகிறது என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close