[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

போலீஸ் துரத்திச்சென்ற தொழிலாளி மாயம் : 5 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு

a-labor-missing-when-police-chasing-him-after-5-days-found-his-body-in-vellore

ஆம்பூர் அருகே 5 நாட்களுக்கு முன் காணாமல் போனவர் தொழிற்சாலை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவர் தனியார் துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று அதே பகுதியில் நடந்த திருவிழாவின் போது நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சி மேடை அருகே நண்பர்களுடன் குடிபோதையில் நடனமாடியுள்ளார். அவரை போலீசார் இரண்டு முறை தாக்கியுள்ளனர். அதன்பின்னர் ஜெயமூர்த்தி மற்றும் அவருடைய நண்பர்களை போலீசார் துரத்தி சென்றபோது, அவர் காணாமல் போனார்.

இதையடுத்து அவரை 5 நாட்களாக உறவினர்கள் பல இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான நார் தொழிற்சாலையில் உள்ள கிணற்றில் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்தது.
தகவலையடுத்து தீயணைப்புத்துறையினர் சென்ற காவல்துறையினர் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிய சடலத்தை மீட்டனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அது காணாமல் போன ஜெயமூர்த்தியின் சடலம் என்பதை உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உறுதிப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த ஜெயமூர்த்தியின் சகோதரர் உமாபதி காவல்நிலையத்தில் தனது சகோதரர் ஜெயமூர்த்தி இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த புகாரை உமராபாத் போலீசார் வாங்க மறுத்து வருவதாக இறந்த ஜெயமூர்த்தியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close