[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

மாற்றுதிறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது !

police-arrested-a-old-man-with-a-sexually-abused-14-years-disability-child-in-tindivanam

திண்டிவனம் அருகே மனவளர்ச்சி குன்றிய 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கிராண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்மணிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர்களில் 14 வயது இளைய மகள் மனவளர்ச்சி குன்றியவர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த கன்னியப்பன்(55) என்பவர் கல்பாக்க மலை அடிவாரத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். அந்த 14 வயது சிறுமியும் அதே பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Image result for சிறுமி பாலியல் வன்கொடுமை

இந்நிலையில் சென்னையில் இருந்த சொந்த ஊருக்கு சென்ற அந்த மாற்றுத்திறனாளி சிறுமியின் அக்காவுக்கு தனது 14 வயது தங்கை எட்டு மாதம் கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியின் அக்கா திண்டிவனம் மகளிர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கன்னியப்பனை திண்டிவனம் மகளிர் போலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close