[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

தமிழகத்தில் தினமும் 6 ல‌ட்சம் பேருக்கு சிகிச்சை : அமைச்சர் விஜயபாஸ்கர்

over-600-000-people-treated-daily-in-tamil-nadu-says-minister-vijayabaskar

தமிழகத்தில் உள்ள அரசு மருத்து‌மனைகளில் நாளொன்றுக்கு 6 லட்சம் பேர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் தினமும் 6 ல‌ட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறினார். திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசு, எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் 20 சதவீதம் மகப்பேறு வீட்டில் நடப்பதாக நிதி ஆயோக்கில் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தவறானது, 99 சதவீத மகப்பேறு மருத்துவமனையில் தான் நடக்கிறது எனவும் கூறினார். 

Image result for TN assembly

இதை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் அரசு மருத்து‌மனைகளில் நாளொன்றுக்கு 6 லட்சம் பேர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதாக கூறினார். குறிப்பாக ஆந்திராவில் இருந்து 30% பேர் தமிழகத்திற்கு வந்து சிகிச்சை பெறுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close