[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூச்சுத்திணறல் காரணமாக பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி!
  • BREAKING-NEWS ஆட்சி அமைக்க ஆதரவு? - உத்தவ் தாக்கரே உடன் சோனியா காந்தி தொலைபேசி உரையாடல்
  • BREAKING-NEWS சிவசேனா ஆட்சியமைத்தால் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தர முடிவு எனத் தகவல்
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு
  • BREAKING-NEWS சிவசேனாவை சேர்ந்த அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு
  • BREAKING-NEWS முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்

விரைவில் விசாரணைக்கு வருகிறது 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு

petition-seeking-11-mla-disqualification-case-sc-hear-soon

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தனியாக இருந்தபோது, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், செம்மலை, நடராஜ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இதனை அடுத்து, 11 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக கொறடா சக்கரபாணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கத் தொடரப்பட்டது. ஆனால் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படவே, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி பணி ஓய்வு பெற்றதால் அவ்வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது.

இதனையடுத்து நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என திமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்நிலையில் தங்க தமிழ்ச் செல்வனின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. வழக்கை விசாரிக்க புதிய அமர்வு விரைவில் அமைக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close