[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

30-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் உடைப்பு - போலீஸ் விசாரணை

mob-demolished-idol-near-tiruvarur

திருவாரூர் அருகே தொழுவணங்குடி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே தொழுவணங்குடி கிராமத்தில் உள்ளது பெரியநாயகி அம்மன் கோயில். பல ஆண்டுகள் பழமையான இக்கோயிலை புதுப்பிப்பதற்காக தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல ஊழியர்கள் நேற்று புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு விட்டு இன்று அதிகாலை மீண்டும் பணிக்கு சென்றுள்ளனர். அப்போது கோயிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சிலை, சிங்க சிலை, கற்சிற்பங்கள் உள்ளிட்ட ஏராளமான சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்துள்ளன. இதனையடுத்து அவர்கள் இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்குவந்த காவல்துறையினர் அருகாமை பகுதியில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அருகே விமான பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து

ஏற்கெனவே கோயிலில் இரண்டு தரப்புக்கு பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அதன் காரணமாகத் தான் சிலைகள் உடைக்கப்பட்டனவா..? அல்லது வேறு ஏதேனும் காரணமா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் எனப் பலரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், சிலை உடைப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close