[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மத்திய அரசின் விருது !

coimbatore-passport-office-get-award-from-central-govt

பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) அலுவலகங்களில் சிறந்த சேவைக்கான மத்திய அரசின் விருதை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பெற்றுள்ளது.

கோவை மண்டல கடவுச்சீட்டு அலுவலர் சிவக்குமார், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மத்திய அரசு சிறந்த சேவைக்கான விருது பெற்றுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், 20 முதல் 21 நிமிட காலத்திற்குள் கடவுச்சீட்டுக்களை பதிவு செய்யும் வகையில் செயல்படுவதால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாகவும், 2013 முதல் 2017 வரையிலும், அதன் பின் தற்போது என 6 முறை இவ்விருதை கோவை அலுவலகம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Image result for கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்

ஆவணங்கள் எளிமைப்படுத்தப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டில் மட்டும் கோவை  பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக 90 ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் மைக்ரோ சிப்கள் பொறுத்தப்பட்ட கடவுச்சீட்டுக்களை வழங்கும் பணி பரிச்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் 6 முதல் 8 மாத காலத்திற்குள் இத்திட்டம் நடைமுறைக்கு வரலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Image result for கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்

தற்போது கோவை மண்டலத்திற்குட்பட்ட 6 மாவட்டங்களில் ராசிபுரம், குன்னூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் தபால் நிலைய கடவுச்சீட்டு மையங்கள் செயல்படுத்தப்பட்டு  வருவதாகவும், தலைமை தபால் நிலையங்களில் 300 சதுர அடி என்ற அளவிலான இடம் கிடைக்காததால் திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் மையங்கள் அமைப்பதற்கான பணிகள் தாமதமாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close