[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

‘மக்களின் கருத்தையே நான் கூறினேன்’ - கிரண்பேடி விளக்கம் 

kiranbedi-explain-about-tamilnadu-water-issue-statement

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு பற்றி நான் கூறியது என் கருத்தல்ல எனவும் மக்களின் கருத்தே எனவும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது எனவும் மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது எனவும் கிரண்பேடி விமர்சித்திருந்தார். மேலும் மக்களின் சுயநல எண்ணமும் மோசமான அணுகுமுறையும் கூட இந்தப் பிரச்னைக்கு காரணம் எனத் தெரிவித்திருந்தார்.

கிரண்பேடியின் இந்த பேச்சுக்கு சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கிரண்பேடி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கிரண்பேடியின் கருத்தை கண்டித்து சட்டப்பேரவையில் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதால் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.  

கிரண்பேடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்த எதிர்கட்சிகள் சார்பிலும் புதுச்சேரி ஆளுங்கட்சி சார்பிலும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து முடிவு இன்று மாலை வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தான் கூறியது மக்கள் கருத்தே என கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிய வாட்ஸ் அப் செய்தியில், “சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு பற்றி நான் கூறியது என் கருத்தல்ல. மக்களின் கருத்தையே நான் கூறினேன். எனது கருத்தில் தனிப்பட்ட எந்த நோக்கமும் இல்லை. அரசாங்கம் என்பது மக்களுக்கு சேவை செய்யத்தான். பிரதமர் மோடியே மழையை சேமிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். அதனால் அனைவரும் ஒன்றிணைந்து மழை நீரை சேமிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close