[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் 

bus-strike-withdrawn-after-talks-with-government

சென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

சென்னை மாநகரப் பேருந்து ஊழியர்கள் இன்று காலை முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் ஓடவில்லை. வழக்கமாக மாத இறுதி நாளில் ஊதியம் வழங்கப்பட்டு விடும் நிலையில் ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்றுவரை வழங்கப்படவில்லை. 

இதனைக் கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, பேருந்து பயணத்தை நம்பியிருக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். 

இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், “ஜூன் மாத ஊதியம் முழுவதும் இன்று மாலை 5 மணிக்குள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அரசு வாக்குறுதியளித்துள்ளது. எனவே நாங்கள் எங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். ஆகவே ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புவர்” எனத் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close